திடீர் தும்மலால் சாலையோர டீக்கடைக்குள் புகுந்த கார்..!

0 2103

மதுரையில் கார் ஓட்டும்போது திடீரென தும்மல் வந்ததால் தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்ததில் அந்தக் கார் சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த சித்த மருத்துவரான சேதுராமன், தனது ஹோண்டா அமேஸ் காரில் வீட்டிலிருந்து சாலைக்கு வந்துள்ளார். மெதுவாக சாலையில் ஊர்ந்து வந்துகொண்டிருந்த கார் திடீரென வேகம் பிடித்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. கடை ஊழியர்கள் கடையின் மறுபுறம் நின்று கொண்டிருந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விசாரணையில் காரை மெதுவாக ஓட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென தும்மல் வந்ததாகவும் அப்போது தவறுதலாக ஆக்சிலேட்டரை பலமாக அழுத்திவிட்டதாகவும் சேதுராமன் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், மீட்பு வாகனம் மூலம் காரை வெளியே எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments