அரசுப் பேருந்தில் அட்டகாசம் செய்த பள்ளி மாணவர்கள், போலீசாரைப் பார்த்ததும் தெறித்து ஓட்டம்

0 3778

சென்னை அம்பத்தூர் அருகே அரசுப் பேருந்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பள்ளி மாணவர்கள் போலீசாரைப் பார்த்ததும் திசைக்கு ஒருவராக தெறித்து ஓடினர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து பாரிமுனை வரை சென்ற அந்த பேருந்தில் காலை 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சீருடையுடன் பயணித்துள்ளனர். பேருந்தில் ஏறியதில் இருந்தே அவர்களில் சிலர் ஒருவரை ஒருவர் ஆபாசமாகப் பேசிக் கொள்வதும் பேருந்தின் மேற்கூரையில் ஏறுவதும் படியில் தொங்குவதும் என அட்டகாசத்தில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.

பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் கண்டுகொள்ளாததால், பேருந்தை நிறுத்திவிட்டு கொரட்டூர் காவல் நிலையத்துக்கு ஓட்டுநர் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து 2 காவலர்கள் அங்கு வந்தனர். அவர்களைப் பார்த்தும் பேருந்தில் இருந்து எகிறிக் குதித்து மாணவர்கள் திசைக்கு ஒருவராக தெறித்து ஓடினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments