பட்டாசு கடை விபத்தில் தேடப்பட்டு வந்த சிறுவனின் உடல்பாகங்கள் மீட்பு... பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

0 2065

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் நிகழ்ந்த தீ விபத்தில், மாயமானதாக தேடப்பட்டு வந்த சிறுவனின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அந்த கோர விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதியின் தம்பி மகனான தனபால் என்ற 11 வயது சிறுவனை சுமார் 15 மணி நேரமாக மீட்பு படையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சிறுவனின் உடல் பக்கத்துக் கடையின் சந்து பகுதியில் கிடந்துள்ளது. வெடி விபத்தில், தூக்கிவீசப்பட்ட சிறுவன், இரு சுவர்களுக்கு இடையே சிதைந்த நிலையில், சடலமாக கிடந்துள்ளான்.

பட்டாசுக் கடையை ஒட்டியவாறு இயங்கிய ஐயங்கார் பேக்கரியில் தீபாவளிக்கு தொடர்ந்து பலகாரங்கள் தயாரிக்கும் பணி நடந்து வந்த நிலையில், அந்த வெப்பத்தின் காரணமாகவோ அல்லது தீப்பொறி பட்டோ பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments