முன்விரோதம் காரணமாக விசிக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

0 46468

சென்னை சேத்துப்பட்டில் முன்விரோதம் காரணமாக விசிக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த இளங்கோவன் என்ற அந்த விசிக பிரமுகருக்கும், அதே கட்சியில் இளைஞரணி பொறுப்பில் இருந்த சஞ்சய் பிரபு என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் பொறுப்புகளை பெறுவதிலும், வளர்ச்சியிலும் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் தெருவிலுள்ள மேடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளங்கோவனை, கூட்டாளிகளுடன் கும்பலாக பைக்கில் வந்த சஞ்சய் பிரபு , ஓட ஓட வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினான்.

இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சஞ்சய் பிரபு உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments