குஜராத்தின் கல்வி நிலைமையை மாற்றியவர் பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்

0 1573
குஜராத்தின் கல்வி நிலைமையை மாற்றியவர் பிரதமர் மோடி - அமித்ஷா புகழாரம்

மோடி குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது  அங்குள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 67 சதவிகிதமாகவும், படிப்பை பாதியில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை 37 சதவிகிதமாகவும் இருந்ததாகவும், ஆனால் மோடியின் திட்டங்களால் மாணவர் சேர்க்கை 100 சதவிகிதமாகவும், படிப்பு நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அறவே இல்லாமலும் மாறியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒரு அரசுத் தலைவராக 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை ஒட்டி, நடைபெற்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

கடந்த 2001 ல் மோடிக்கு எந்த விதமான அரசு நிர்வாக அனுபவங்களும் இல்லாத நிலையில், அவரை குஜராத் முதல்வராக்குவது என பாஜக எடுத்த முடிவு அபூர்வமானது என்றார் அமித் ஷா. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments