ஜியோவின் புதிய ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு அறிமுகம் - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

0 12254

ஜியோ நிறுவனம் உருவாக்கி உள்ள புதிய ஸ்மார்ட்போன் திபாவளிக்கு அறிமுகமாகும் என கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள ஜியோ போன் நெக்ஸ்ட்  என பெயரிடப்பட்ட அந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ரய்டை அடிப்படையாக கொண்ட பிரகதி ஓஎஸ் என்ற இயங்குதளத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், சாதாரண செல்போன் பயன்படுத்துபவர்களை, ஸ்மார்ட்போனுக்கு மாற வழிவகை செய்யும் என சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்காக வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளதாக ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், 3 ஆயிரத்து 500 ரூபாய் என்ற விலையில் இந்த ஸ்மாட்போன் விற்பனைக்கு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments