ஆவடியில் இருசக்கர வாகனத்தை எடுக்கும்போது மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்த முதியவர் - சிசிடிவி காட்சி

0 29243

சென்னை ஆவடியில் சாலையோரம் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாயில் முதியவர் ஒருவர் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆவடியில் 49 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், வடிகால்வாய் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது டிவிஎஸ் எக்சல் வாகனத்தை எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி கால்வாய்க்குள் விழுந்துள்ளார்.அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக முதியவரை பத்திரமாக மீட்டனர். இந்த மழைநீர் வடிகால்வாய்ப் பணிகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் கடந்த 8 மாத காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகக் கூறும் அப்பகுதிவாசிகள், பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments