இருசக்கர வாகனத்தில் இருந்து தீடிரென வெளிவந்த கொம்பேறிமூக்கன் பாம்பு... இளைஞர் அலறியடுத்து ஓட்டம்

0 2476

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனத்தில் இருந்து வெளிவந்த பாம்பை கண்டு இளைஞர் ஒருவர் அலறியடித்து ஓடினார்.

ஜாவித் என்பவரின் வாகனத்தில் பெட்ரோல் டேங்க் அடிப்புறத்தில் இருந்ததாக கூறப்படும் பாம்பு, திடீரென வெளிவந்ததால் வாகனத்தை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து இளைஞர் ஓடியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வாகனத்தில் இருந்த பாம்பை தேடிய போது, அருகில் இருந்த டீக்கடையில் சுடு நீரை வாங்கி வாகனத்தின் முன் பகுதியில் ஊற்றியதில் சூடுதாங்காமல் வெளிவந்த இரண்டடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் பாம்பினை அங்கிருந்தோர் அடித்து கொன்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments