எஸ்.கே.எம். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

0 11417
எஸ்.கே.எம். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

ஈரோட்டை தலைமையிடமாக கொண்ட எஸ்.கே.எம். பூர்ணா சமையல் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மொடக்குறிச்சி சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சந்திரசேகர், சிவக்குமார் ஆகியோருக்கு சொந்தமானது எஸ்.கே.எம். நிறுவனம். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு சொந்தமான நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் இயங்கும் மாட்டுத்தீவன உற்பத்தி ஆலை, எஸ்.கே.எம். பூர்ணா சமையல் எண்ணெய் ஆலை, சோளங்காபாளையத்திலுள்ள முட்டை உற்பத்தி ஆலை, சாவடிப்பாளையம் பகுதியிலுள்ள சித்த மருந்து தயாரிப்பு ஆலை மற்றும் விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் ரெய்டு நடக்கிறது.

இதுதவிர, எஸ்.கே.நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகள், தலைமை அலுவலகங்களும் சோதனை நடக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments