வந்தவாசி அருகே பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; ஆரணி சரக வனக்காவலர் கைது

0 2040
வந்தவாசி அருகே பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வனக்காவலர் கைது செய்யப்பட்டார்.

பெரணமல்லூர் பகுதியை சேர்ந்த பழங்குடியின பெண் மற்றும் அவரது சகோதரி விறகு வெட்டுவதற்காக வாழ்குடை கிராம காட்டுப்பகுதி வழியாக கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த ஆரணி சரக வனக்காவலர் செல்வராஜ், அப்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை அப்பெண், தான் மறைத்து வைத்திருந்த செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில், ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் வனக்காவலர் செல்வராஜை கைது செய்தனர். விசாரணையில் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments