முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான நச்சுப் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் - விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்

0 1118
முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான நச்சுப் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகக் கேரளத்தில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நச்சுப் பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என 5 மாவட்ட விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள குரல் பதிவில், அணை வலுவாக இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதையும், கேரளத்துக்குத் தமிழ்நாட்டில் இருந்து 66 வகையான உணவுப் பொருட்கள் அனுப்பப்படுவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

5 மாவட்டங்களில் ஒருகோடி மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக நச்சுப் பிரச்சாரத்தைக் கைவிடாவிட்டால் 2011ஆம் ஆண்டில் செய்தது போலக் கேரளத்துக்கு எதிராக மீண்டும் பொருளாதார வணிக முறையிலான முற்றுகையைத் தொடங்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments