கூலித் தொழிலாளி போல வேலை பார்த்து வந்த ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட் கைது.. சென்னை போலீஸ் அதிரடி..

0 16326
ஜார்க்கண்ட் மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஜார்க்கண்ட் மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் சுகார் கஞ்சு என்பவனை அம்மாநில காவல்துறை தீவிரமாக தேடி வந்தது. இந்த நிலையில், அவன் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து ஜார்கண்ட் மாநில போலீசார் சென்னை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி எண்ணூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சுகார் கஞ்சுவை எண்ணூர் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வேறு மாவோயிஸ்டுகள் யாரேனும் கூலி தொழிலாளர்கள் போல் தமிழகத்திற்குள் பதுங்கியிருக்கிறார்களா என தமிழக கியூ பிரிவு போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments