ரஷ்யாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 1,106 ஆகப் பதிவு

0 2263

ரஷ்யாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்து 106 ஆக பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த 8 நாட்களில் 6 முறை கொரோனா உயிரிழப்பு புது உச்சம் தொட்டதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 98 முதல் 99 சதவீதத்தினருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Volzhskiy உள்ளிட்ட நகர மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதால் அடுத்து வரும் நோயாளிகளை எங்கே அனுமதிப்பது என்ற கவலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments