ரவுடியின் குடும்பத்தை அலறவிட்ட போலீசார்... வீடு புகுந்து சோதனை.... கை கால்களை உடைப்பதாக கதறல்.!

0 5007

7 கொலை உள்ளிட்ட 52 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஒருவனின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார், அவனது குடும்பத்தினரை கதறவிட்ட சம்பவம் திருச்சியில் அரங்கேறி உள்ளது. கஞ்சாவுக்கு ஆர்டர் கொடுத்து போக்கு காட்டிய ரவுடி, போலீசாரிடம் சிக்கிய பின்னணி குறித்து விவரிகின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை பெரு நகர காவல்துறையினரின் குற்றப்பதிவேட்டின்படி ஏ பிளஸ் பிரிவில் முக்கிய ரவுடியாக இடம் பெற்றுள்ள எண்ணூர் தனசேகரன் மீது 7 கொலை வழக்குகள் உட்பட 52 வழக்குகள் உள்ளன. இவற்றில் சில வழக்குகளில் தனசேகரன் விடுவிக்கப்பட்டாலும் 3 முறைக்கும் மேல் குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளான். 2 முறை வழுக்கி விழுந்து கைகால்களை முறித்துக் கொண்டதாகவும் அதன் பின்னரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த தனசேகரன், திருச்சி திருவெறும்பூர் கோல்டன் நகரில் உள்ள வீட்டில் பதுங்கி கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாதவரம் தனிப்படை போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து படுக்கை அறை, பூஜை அறை, ஷோபாவுக்கு அடியில் என்று வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக தீவிரமாக தேடினர்.

தனது அட்ராசிட்டியினால் பலரை நடுங்க வைத்த ரவுடியின் குடும்பத்தினர், போலீசாரின் திடீர் சோதனையால் தனசேகரன் தங்கள் வீட்டில் இல்லை என்று கூறி கதறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனாலும் போலீஸ் குழு ஒன்று தனசேரனின் வீட்டுக்கு வெளியே காந்திருந்த நிலையில், போலீஸ் பிடிச்சிட்டு போனா கூட பரவாயில்லை கை, கால்களை ஒடித்து விடுகின்றனர் என்று அவரது உறவுக்கார பெண் கதறினார்..

தனிப்படை போலீசார் திருச்சியில் காத்திருப்பது போல குடும்பத்தினருக்கு போக்கு காட்டிவிட்டு, சென்னை மாதவரம் அருகே வைத்து 20 கிலோ கஞ்சாவுடன் கூட்டாளிகளுடன் வந்த தனசேகரனை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ரவுடிகளுக்கு எதிராக தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போலீசார், கஞ்சாவிற்பனை மற்றும் ரவுடிகள் அச்சுருத்தல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments