நீர்மூழ்கி கப்பல் குறித்த ரகசிய தகவல்கள் கடத்தப்பட்டதாக வழக்கு ; கடற்படை கமாண்டர் உள்ளிட்ட 3 பேர் கைது

0 1838
நீர்மூழ்கி கப்பல் குறித்த ரகசிய தகவல்கள் கடத்தப்பட்டதாக வழக்கு ; கடற்படை கமாண்டர் உள்ளிட்ட 3 பேர் கைது

கடற்படையின் கிலோ ரக நீர்மூழ்கிகளை நவீனப்படுத்துவது தொடர்பான ரகசிய விவரங்களை வெளியாருக்கு கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் தற்போது பணியில் உள்ள கடற்படை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர்மூழ்கி கப்பல் குறித்த முக்கிய ராணுவ தகவல்களை அங்கீகாரமில்லாத சிலருக்கு அளித்த து தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும், அதற்கு இந்திய கடற்படை முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான கடற்படை அதிகாரி கமாண்டர் அந்தஸ்தில் உள்ளவர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. சோவியத் ஒன்றியத்திடம் இருந்து வாங்கப்பட்ட கிலோ ரக 10 நீர்மூழ்கிகள் நமது கடற்படையால் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments