சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கு ; கணவன்-மனைவிக்கு தூக்கு தண்டனை

0 2557
கணவன்-மனைவிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு

திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன்-மனைவிக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2019 ம் ஆண்டு திண்டிவனத்தில் சொத்துக்காக தந்தை ராஜி, தாய் கலைச்செல்வி, தம்பி கவுதம் ஆகியோர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விட்டு ஏ.சி வெடித்து இறந்து விட்டதாக நாடகமாடிய வழக்கில் மகன் கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றவாளிகளான இரண்டு பேருக்கும் தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments