10.5 சதவீத இடஒதுக்கீடு - காலியிடம் இருந்தால், ஓபிசி, சீர்மரபினர்களை கொண்டு நிரப்ப உயர்கல்வித்துறை உத்தரவு

0 1587

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின பிரிவு மாணவர்கள் மூலம் நிரப்பலாம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழில், ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை மற்றொரு பிரிவினரைக் கொண்டு சுழற்சி முறையில் நிரப்பிடவும் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு, சீர் மரபினர் பிரிவில் காலியிடங்கள் இருந்தால், அதனை வன்னியர்கள் மூலம் நிரப்பிட ஏதுவாகவும் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments