வலையில் சிக்கிய சுமார் 1,500 கிலோ எடைகொண்ட ராட்சத திமிங்கலத்தை, மீண்டும் கடலிலேயே விட்ட மீனவர்கள்

0 2589

ர்நாடகாவில் சுமார் ஆயிரத்து 500 கிலோ எடைகொண்ட திமிங்கலம் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில், அதை மீண்டும் அவர்கள் கடலிலேயே விட்ட வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

அம்மாநிலத்தின் மங்களூர் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சாகர் என்பவர் சக மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும் வழியில், படகில் மீனவர்கள் வலையை பிரித்து பார்த்தபோது ராட்சத திமிங்கலம் சிக்கியது அவர்களுக்கு தெரியவந்தது.

இதனை அடுத்து, ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள அந்த பெரிய அளவிலான திமிங்கலத்தின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மீனவர்கள், அதனை மீண்டும் கடலிலேயே விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments