பாகிஸ்தானில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் உயிரிழப்பு.. 15 பேர் காயம்..!

0 1802

பாகிஸ்தானில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்தனர்.

இஸ்லாமாபாத்தின் குர்ரம் மாவட்டத்தின் கோஹத் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் பிரச்சனைக்குரிய மலை பகுதியில் உள்ள மரங்களை வெட்டி எடுப்பதில் ஷியா- சன்னி பிரிவினரிடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் ஷியா பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில், அல் கைய்தா மற்றும் தாரீக்- இ- தாலிபான் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய சில ஆயுதம் ஏந்திய சன்னி பிரிவினர், ஷியா பிரிவினருடன் மோதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments