சீனாவில் அக்.17-ஆம் தேதி முதல் 198 பேருக்கு டெல்டா வகை தொற்று பாதிப்பு..!

0 1811

சீனாவின் 40 லட்சம் பேர் வாழும் லான்செள (Lanzhou) நகரில் ஒரே நாளில் புதிதாக 6 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், அந்நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வடமேற்கு மாகாணமான (Gansu) கான்சு தலைநகரான லான்செளவில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ காரணங்கள் தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் மக்கள் வெளியே வர அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா முழுவதும் ஒரே நாளில் 29 புதிய கொரொனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீனாவில் கடந்த 17-ஆம் தேதி முதல் புதிதாக பரவத்தொடங்கியுள்ள டெல்டா வகை கொரோனாவால் இதுவரை 198 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் அதிகப்படியான பரிசோதனைகள் செய்தால் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments