"குழந்தைகளின் அறியாமை, தனிமையைப் பயன்படுத்தி தவறு நடக்கும் போது, பாதிக்கப்பட்ட சிறுமிகளை தவிர வேறு சாட்சியங்களை எதிர்பார்க்க முடியாது"- நீதிமன்றம்

0 3075

றியாமையையும், தனிமையையும் பயன்படுத்தி குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும்போது, அவர்களை தவிர வேறு சாட்சியங்களை எதிர்பார்க்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

2019-ல் கோவையில் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ரூபன் என்பவனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோயம்புத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து ரூபன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் தெளிவாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொண்ட கோயம்புத்தூர் நீதிமன்ற தீர்ப்பு சரியானது எனக் கூறி, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments