வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0 2954

திருவாரூரில் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் கால்தவறி கீழே சென்றுகொண்டிருந்த மின்கம்பியின் மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேதாஜி சாலையில் வசித்து வந்த ராஜஸ்தான் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த ஹரிஷ்சிங் என்பவரது 13 வயது மகன் பிரவீன் கடந்த 24-ம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே சென்றுகொண்டிருந்த மின்கம்பியின் மீது விழுந்தான். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத பெற்றோர் உடலை அடக்கம் செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments