அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 7376

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை அரும்பாக்கம்சென்னை அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், அறக்கட்டளை பங்களிப்புடன் செயல்வழி கற்றல் முறை திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் நிலையை மாற்றும் வகையில் இன்று அரசுப்பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தானே என்று தாழ்வாக எண்ணிவிடக்கூடாது என்றும் அரசுப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த முதலமைச்சர் வேகமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments