சாதாரண குடிமகனை கரம் பிடித்து இளவரசி பட்டத்தை துறந்தார் ஜப்பான் இளவரசி!

0 6046

ஜப்பான் இளவரசி மாகோ, சாதாரண குடிமகனான தன் காதலர் Kei Komuro-வை மணந்து, தன் இளவரசி பட்டத்தை துறந்தார்.

4 ஆண்டுகளுக்கு முன் தங்கள் நிச்சயதார்த்ததை அறிவித்த தம்பதிக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்த நிலையில், காதலர் Komuro-வின் தாய் பண மோசடியி புகாரில் சிக்கியதால் சர்ச்சை எழுந்தது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தன் காதலரை கரம் பிடித்த மாகோ, இன்று அரண்மனையிலிருந்து வெளியேறினார். அவரை அவரது குடும்பத்தார் கண்ணீர்மல்க வழியனுப்பி வைத்தனர்.

அரச குடும்ப அந்தஸ்த்தை துறந்த மாகோ, சாதாரண குடிமக்களை மணக்கும் அரச குடும்ப பெண்களுக்கு பொதுவாக வழங்கப்படும் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தையும் நிராகரித்ததாக கூறப்படுகிறது.  தம்பதி இருவரும் நியூ யார்க்கில் குடியேறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments