வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 1994

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, கோவை, திருச்சியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், எஞ்சிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளைய தினமும் நீலகிரி, நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

29-ந் தேதி கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தென்மேற்கு வங்கக் கடலுக்கு நாளையும், நாளை மறுநாளும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments