வன்கொடுமை செய்து பெண் கொலை..! தூண்டிலால் சிக்கிய திமிங்கலங்கள்..!

0 4928

தஞ்சாவூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் மீன்பிடி தூண்டிலை தடயமாக வைத்து 12 மணி நேரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

திங்கட்கிழமையன்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற அந்த இளம்பெண், இரவு வரை வீடு திரும்பாததால், பெற்றோர், உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது, காட்டுப்பகுதியில் இளம்பெண்ணின் செருப்பு, கை அரிவாளும் கிடந்துள்ளது. சற்று தூரத்தில் ஆடைகள் கலைந்த நிலையில், உடல் முழுவதும் காயங்களுடன் இளம்பெண் சடலமாக கிடந்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் கிடந்த மீன்பிடி தூண்டிலை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவனும், சதீஷ் என்பவனும் சிக்கினர்.

வடவாறு ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவரும், தனிமையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை தூக்கிச் சென்று புதர் பகுதிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. 31வயதுடைய திருமணமாகாத அந்த இளம்பெண்ணை தினமும் ஆடு மேய்க்க வரும் போது பல நாட்களாக நோட்டமிட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று இளம்பெண் தனியாக ஆடு மேய்க்க வந்ததால் அதனை சாதகமாக்கிக் கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக இருவரும் போலீசாரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

பல நாள் இச்சையை தீர்த்துக் கொண்ட இருவரும், எங்கு இளம்பெண்ணை உயிரோடு விட்டால், உண்மை வெளியே தெரிந்துவிடும் என எண்ணி, தலையை தரையில் அடித்துக் கொடூரமாக கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். இச்சம்பவத்தில், வேறு யாரேனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என கைதான இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments