பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க செல்வதற்கு தடையில்லா சான்று அவசியம் - அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்!

0 2009

பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க செல்லும் மாணவர்கள் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் தடையில்லா சான்று பெறுவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் மாணவர்கள் அதிக கவனத்துடன் படிப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தொழிற்கல்வி படிப்புகளுக்கு இணையில்லாத படிப்புகளை வெளிநாடுகளில் அதிக செலவில் படிப்பதால், இந்தியாவில் வேலை கிடைப்பதில்லை எனவும், வெளிநாடுகளில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு இந்தியாவில் வேலை கிடைக்குமா? பட்ட மேற்படிப்பு படிக்க இயலுமா? என்பதை சரிபார்த்த பின் சேர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments