வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

0 13470

வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடிய வளிமண்டல சுழற்சி, அடுத்த 48 மணி நேரத்திற்குள் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறக் கூடும் எனவும், இது மேற்கு திசை நோக்கி நகரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வடகிழக்கு பருவமழை காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments