தென் மாவட்டங்களில் சசிகலா ஒரு வார காலம் சுற்றுப் பயணம்.!

0 2861

தென் மாவட்டங்களில் ஒரு வார காலம் அரசியல் ரீதியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சசிகலா, சென்னையில் இருந்து அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் புறப்பட்டு சென்றார்.

தியாகராய நகர் வீட்டிலிருந்து புறப்பட்ட சசிகலாவுக்கு, அவரது ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். முதலில் தஞ்சாவூர் செல்லும் சசிகலா நாளை அங்கு நடைபெறும் டி.டி.வி.தினகரனின் மகள் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். 28-ந் தேதி மதுரையில் முத்துராமலிங்கம், மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தும் சசிகலா, ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

29-ம் தேதியும் ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து அக்கட்சியினர் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழலில், சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் அரசியல் களத்தில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments