நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த மருத்துவர்

0 3001

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

பெலகுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் சன்னேசப்பா மது, சூதாட்டத்திற்கு அடிமையானதாக கூறப்படும் நிலையில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி ஷில்பாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் சில்பாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே, சன்னேசப்பா சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று திடீரென சில்பாவுக்கு உடல்நிலை மோசமாகவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சன்னேசப்பா, சிறிது நேரத்தில் வீடு திரும்பி, செல்லும் வழியிலேயே ஷில்பா இறந்துவிட்டதாக கூறியுள்ளான். இதனை நம்பாமல் ஷில்பாவின் பெற்றோர் போலீசில் புகாரளிக்கவே, விசாரணையில் ஊசி மூலம் அளவுக்கு அதிகமாக டெக்சாமெத்தாசோன் ஸ்டீராய்டு என்ற மருந்தை செலுத்தி உயிரிழக்கச் செய்தது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments