மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான கலந்தாய்வு நிறுத்தி வைப்பு - மருத்துவ சேவைகளுக்கான இயக்ககம்!

0 1467

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவ சேவைகளுக்கான இயக்ககம் அறிவித்துள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று நடந்த விசாரணையின்போது, இடஒதுக்கீடு குறித்து முடிவெடுத்த பின்னரே மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என்றும், அதுவரை நிறுத்திவைக்குமாறு கூறிய நீதிபதிகள், வழக்கை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments