கொடுக்கல் வாங்கல் தகராறில் தாத்தாவை கத்தியால் குத்தி கொலை செய்த பேரன்

0 2327

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் தாத்தாவை கத்தியால் குத்தி கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டான். 

பண்ணையத்துசந்து என்ற தெருவில் வசித்து வந்த 75வயது முருகேசன்  என்ற முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது சம்பந்தமாக போலீசார் சிசிடிவி உதவியுடன் தீவிர புலன் விசாரணை செய்து முருகேசனின் பேரனான 15வயது  சிறுவன் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

விசாரணையில் வட்டித் தொழில் செய்து வந்த தாத்தாவுக்கு உதவியாக தான் இருந்து வந்த தாகவும், கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட கோபத்தில் அவரை கொலை செய்த தாகவும் சிறுவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவனை கைது செய்த போலீசார்  சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments