மத்தியப் பிரதேச அமைச்சரின் எச்சரிக்கை.. சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நீக்கியது டாபர் நிறுவனம்

0 3784

மத்தியப் பிரதேச அமைச்சரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து டாபர் நிறுவனம் சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நீக்கியுள்ளது.

கர்வா சவுத் பண்டிகையின் போது லெஸ்பியன் ஜோடி திருமணம் செய்து கொள்வது போன்று டாபர் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரத்தை அனுமதிக்க முடியாது என மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்திருந்தார். மேலும் டாபரின் விளம்பரம் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து குறிப்பிட்ட விளம்பரத்தை அனைத்து சமூக ஊடகங்களில் இருந்து நீக்கியதுடன், மன்னிப்பு கோருவதாகவும் டாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments