இத்தாலி அருகே கடலில் தத்தளித்த 339 லிபியா நாட்டு அகதிகளை மீட்டு முகாமில் சேர்த்த கடற்படை அதிகாரிகள்!

0 1114

இத்தாலி கடல் எல்லைப் பகுதியில் மோசமான வானிலை காரணமாக மீன் பிடிப் படகில் சென்ற 339 அகதிகளை மீட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடுக்கடலில் தத்தளித்தவர்களை ஐரோப்பிய ஒன்றிய கடற்படை குழு மற்றும் ரோமானிய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் லிபியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள Tobruk நகரைச் சேர்ந்தவர்கள் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்கள் கலபிரியன் மாகாணத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments