ஜெயலலிதா கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் தொடர்பான வழக்கு... கோடநாடு வழக்கில் கனகராஜின் அண்ணன், உறவினர் கைது!

0 1632

கோடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜ் மரணம் தொடர்பான வழக்கில்  சாட்சிகளை கலைக்க முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கனகராஜின் அண்ணன் உள்பட 2பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் மோதி உயிரிழந்த சம்பவம் சாலை விபத்து என்று கூறப்பட்ட நிலையில் அவரது அண்ணன் தனபால் இதனை  மறுத்து தம்பியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக உதகை தனிப்படை போலீசார்  தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை கோவை அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் இருவரும்  மாற்றி மாற்றி தகவலை கூறி வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சாட்சிகளை கலைக்க முயன்றதாக இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வருகிற 8-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் கூடலூர் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments