வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

0 992

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் நடக்கும் கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பருவ மழை தொடங்க உள்ள நிலையில் நகர்ப்புற, ஊரக பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், ஏரிகள், நீர் நிலைகள், ஆறுகள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிப்பது கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளை கண்காணிப்பது உள்ளிட்ட அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments