சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்ற ஓ.பி.எஸ் கருத்துக்கு எதிர்ப்பு

0 3520
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு - ஓ.பி.எஸ்

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து  நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்ட நிலையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கேபிமுனுசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கான தங்க அங்கியை மதுரை வங்கி லாக்கரில் இருந்து எடுத்துக் கொடுப்பதற்கு வந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஓ.பி.எஸ்ஸின் இந்த பதில் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , சசிகலாவை எதிர்த்து தான் ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார் என்றும் ஏற்கனவே கட்சியில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பொதுக்குழுவில் முடிவெடுத்து தான் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கயதாகவும் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி கூறுகையில், பொதுக்குழு கூடித்தான் சசிகலா நீக்கப்பட்டுள்ளார் என்றும் அதிமுக சாதி மத பேதமின்றி அனைவருக்காகவும் தொடங்கப்பட்ட இயக்கம் என்றும் ஒரு சாதிக்காக செல்லுமானால் உயிரை விட்டுவிடுவேன் என்று ஆதங்கம் தெரிவித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments