பேருந்தில் குரங்குகள் போல தொங்கி விபரீத சாகசம் செய்யும் மாணவர்கள்.. ஆவேசமான ஓட்டுநர்..!

0 3757
பேருந்தில் குரங்குகள் போல தொங்கி விபரீத சாகசம் செய்யும் மாணவர்கள்

வேலூரில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் கம்பிகளில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான வகையில் பயணம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. சத்தம் போட்ட நடத்துனரிடம் வம்புக்கு நின்ற வாலில்லா வாலிகள் குறித்து விவரிக்கின்றது இந்தச் செய்தி தொகுப்பு..

மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்ற டார்வினின் கூற்றை நினைவூட்டுவது போல, நம்ம வாலில்லா பசங்க செய்கின்ற சேட்டைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்..!

வேலூர் அண்ணா சாலை பழைய பேருந்து நிலையத்திலிருந்து ராஜா தியேட்டர் ஸ்டாப், முஸ்லிம் ஸ்கூல் ரவுண்டானா, தொரப்பாடி, வழியாக பாகாயம் செல்ல கூடிய நகரப்பேருந்து, பசுமாத்தூர், பொய்கை, விரிஞ்சிபுரம் பகுதியில் இருந்து பள்ளிக்கு வரக்கூடிய நகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் புட்போர்டு அடித்தும் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடியும் ஆபத்தான பயணங்களை செய்து வருகிறனர்.

பள்ளி மாணவர்கள் பேருந்துக்கு உள்ளே இடம் இருந்தாலும் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை பார்த்த பேருந்து நடத்துனர் மாணவர்களை பேருந்தின் உள்ளே வரும்படி அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால், சில வம்புக்கார மாணவர்கள் உள்ளே செல்லாமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால், கோபமடைந்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு மாணவர்களுக்கு புத்தி சொல்ல , அவரை அடிக்க பாய்ந்தான் ஒரு மாணவன். இதனை படம் பிடித்துக் கொண்டே அந்த வழியாக வந்த வாகன ஓட்டியிடம் தங்களின் நிலையை ஆதங்கத்துடன் எடுத்துக் கூறும் நிலைக்கு தள்ளப்பட்டார்

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த வம்புக்கார மாணவனோ பேருந்தில் ஏற மறுத்து அடம்பிடித்தான். மாணவர்களின் பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தகுந்த அறவுரைகளை வழங்க வேண்டும் என்பதே ஓட்டுனர்களின் ஆதங்கமாக உள்ளது.

மாணவர்களின் நலன் கருதி அரசு பேருந்துகளில் இலவச பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆபத்தை வரவழைத்துக் கொள்ளும் வகையில் படியில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு ஒத்துழைக்க வேண்டும்.

அதே நேரத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட வழிதடங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்கினால் இது போன்று கூட்ட நெரிசலான பயணம் தவிர்க்கப்படும் என்பது மாணவர்களின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments