தளபதியை பார்க்க தடையா..? தரையில் அமர்ந்து போராட்டம்..? அ.இ.த.வி.ம.இ தொண்டர்கள் ஆவேசம்..!

0 5949
தளபதியை பார்க்க தடையா..? தரையில் அமர்ந்து போராட்டம்..? அ.இ.த.வி.ம.இ தொண்டர்கள் ஆவேசம்..!

உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினரை நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிலையில் சந்திக்க அனுமதிக்கப்படாத தொண்டர்கள் அவரது அலுவலகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெற்றிப்பெற்றவர்களையும் வெற்றிக்கு உழைத்த மாவட்ட பொறுப்பாளர்களையும் நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தினார். அவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பாகவும் நடிகர் விஜய் ஆலோசித்தார்.

விஜயை சந்திக்க பனையூருக்கு வருகை தந்த ஆர்வ மிகுதி ரசிகர்கள் சிலர் தலைக்கு மேல் இருந்த மின்சார கம்பியையும் பொருட்படுத்தாமல் , கட்டடம் ஒன்றின் மீது ஏறி நின்று , தளபதி I love you... விஜய் அண்ணா வெளியில் வந்து hai சொல்லுங்க எனவும் ஆபத்தான முறையில் நின்று கொண்டு கோஷமிட்டனர்.

வெர்றி பெற்றவர்களுடன் வந்த தொண்டர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆவேசம் அடைந்த அவர்கள் தங்களையும் விஜயை பார்க்க அனுமதிக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் ரசிகைகள் சிலர் தங்களையும் அலுவலகத்திற்குள் அனுமதித்து நடிகர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கண்ணீருடன் காத்திருந்தனர்.அதே நேரத்தில் இந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் , ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 15 பேரில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments