ஷமி மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் - முன்னாள் வீரர்கள் கண்டனம்

0 13753
ஷமி மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் - முன்னாள் வீரர்கள் கண்டனம்

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதற்கு முகமது ஷமியே காரணம் என சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரவியதற்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் 3 புள்ளி 5 ஓவர்களில் 43 ரன்களை ஷமி விட்டுக்கொடுத்த நிலையில், அவரது பந்துவீச்சால் தான் இந்தியா தோல்வியடைந்ததாக சிலர் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் விமர்சித்திருந்தனர்.

இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், ஷமி மீதான ஆன்லைன் தாக்குல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகவும், அவர் ஒரு சிறந்த வீரர் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments