விஜயை பார்க்க மனைவியுடன் நீண்ட நேரம் காத்திருந்த நிர்வாகி.. மனைவி மயங்கி விழுந்ததால் பதவியை ராஜினா செய்வதாக அதிரடி..!

0 5104
நீண்ட நேரமாக காத்திருந்த மனைவி மயங்கி விழுந்தார்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் நிர்வாகியின் சகோதரர் விஜையை பார்ப்பதற்காக வந்த நிலையில் நீண்ட நேரமாக அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்த அவரது மனைவி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒன்றிய வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றார்.இதனையடுத்து அவருக்கு பதிலாக அவரது சகோதரர் எழில் தனது மனைவியுடன் விஜயை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வந்த நிலையில், நீண்ட நேரமாக வெளியே காத்திருந்தார்.

இந்நிலையில் அவரது மனைவி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த ரசிகர்கள் அவரை தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். தனது மனைவி மயக்கம் அடைந்த பிறகும் மாநில பொறுப்பாளர்கள் யாரும் வெளியில் வந்து பார்க்கவில்லை என்று கோபமடைந்த எழில் மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு சென்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments