சேலத்தில் கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட முயன்ற மூவர் கைது!

0 3168

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

தப்பகுட்டை கிராமத்தில் அதிகளவில் கள்ளநோட்டு புழக்கத்திலிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கள்ளநோட்டு வைத்திருந்த பொண்ணுவேல் என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற நிலையில், அவரை துரத்திப்பிடித்தனர்.

அவருக்கு கள்ளநோட்டு வழங்கிய மாட்டையாம்பட்டியைச் சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டு அச்சடித்துக் கொடுத்த சின்னத்தம்பி என்பவரை கைது செய்த போலீசார் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும்,  கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய பிரிண்டரை பறிமுதல் செய்தனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments