ரவுடியைப் பிடிக்கச் சென்றபோது போலீசாரைத் தாக்கியதாகப் புகார் ; ரவுடியின் குடும்பத்தினர் 14 பேர் கைது

0 2167
ரவுடியைப் பிடிக்கச் சென்றபோது போலீசாரைத் தாக்கியதாகப் புகார் ; ரவுடியின் குடும்பத்தினர் 14 பேர் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ரவுடியை பிடிக்கச் சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக அவனது குடும்பத்தினர் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

போஜராஜன் நகரைச் சேர்ந்தவன் விக்னேஷ் என்கிற ரூட் விக்கி. 2 ஆண்டுகளுக்கு முன் ரயிலில் சென்ற பெண்ணிடம் 12 சவரன் நகையைப் பறித்த வழக்கு தொடர்பாக ரூட் விக்கியை போலீசார் தேடி வந்தனர். நேற்று விக்கி அவனது வீட்டுக்கு வந்திருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து 2 போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது விக்கியின் உறவினர்கள் போலீசாரைத் தாக்கினர் என்று கூறப்படும் நிலையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு, விக்கியை கைது செய்ய முயன்றனர். ஆனால் கைது செய்ய விடாமல் குடும்பத்தினர் அவனை சூழ்ந்து அரண்போல் நின்று போலீசாரைத் தடுத்தனர் என்று கூறப்படுகிறது. ஒருவழியாக விக்கியை கைது செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட அவனது குடும்பத்தினர் 14 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments