பழனியில் சைரன் வைத்த காரில் உலா வந்த போலி ஐஏஎஸ் அதிகாரி கைது!

0 3082

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சைரன் வைத்த காரில் உலா வந்த போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு வந்த குமார் என்பவன், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என கூறி, விடுதியில் இலவசமாக தங்க அனுமதிக்குமாறு கூறியுள்ளான்.

அப்போது விடுதி மேலாளர், அவரது  அடையாள அட்டையை கேட்டதுடன், பழனியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரி ஒருவரை பரிந்துரை செய்யவும் கூறியதால் குமார் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த மேலாளர் போலீசுக்கு தகவல் அளித்ததையடுத்து, தப்பிச்செல்ல முயன்ற குமாரை ஊழியர்கள் துரத்தி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில்,  குமார் நாகையை சேர்ந்தவன் என்பதும் தமிழக அரசு என்ற பதாகையை காரில் மாட்டிக்கொண்டு தன்னை ஐபிஎஸ் என கூறி சலுகைகளை அனுபவித்து வந்தது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments