தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து!

0 3164
தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் கலைச்சேவையை பாராட்டி, திரையுலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதினை வழங்கினார்.

இதனை அடுத்து பேசிய ரஜினிகாந்த், தாதா சாஹேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த விருதை தனது வழிகாட்டி, கே பாலச்சந்தருக்கு அர்ப்பணிப்பதாக அவர் குறிப்பிட்டார். தன்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என குறிப்பிட்டு ரஜினிகாந்த் உரை ஆற்றினார்.

முன்னதாக, சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான விருது அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டது. அப்படத்திற்காக தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் விருதினை பெற்றனர்.

அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

பார்த்திபன் இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேர்வுக்குழுவின் சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது. இதற்கான விருதை நடிகர் பார்த்திபன் பெற்றுக் கொண்டார். இத்திரைப்படத்தின் ஒலிக்கலவை பணிகளுக்காக ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

விஸ்வாசம் திரைப்படத்திற்காக இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை பெற்றார்.

கே.டி. என்ற கருப்புதுரை திரைப்படத்தில் நடித்ததற்காக நாக விஷால், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதினை பெற்றார்.

மணிகர்னிகா - குயின் ஆஃப் ஜான்சி மற்றும் பங்கா ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகைக்கான விருதை கங்கனா ரணாவத் பெற்றார். இது அவர் வெல்லும் 4ஆவது தேசிய விருதாகும்.

போன்ஸ்லே என்ற படத்திற்காகா சிறந்த நடிகருக்கான விருதினை மனோஜ் பாஜ்பாய் பெற்றார்.

மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோர், சிறந்த இந்தி மொழிப் படத்திற்கான விருதை வென்றது. அப்படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி விருது பெற்றநிலையில், சுஷாந்த் தங்களை பெருமடைய செய்ததாக மேடையில் அவர் உருக்கமாக தெரிவித்தார்.

மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம்', சிறந்த படத்திற்கான விருதை பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments