உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் மதிப்புக்கு இலவச சிகிச்சை வசதி... தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தியின் அடுத்த வாக்குறுதி!

0 1750

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடக்க உள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பிரியங்கா காந்தி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இந்த நிலையில் டுவிட்டரில் இந்த புதிய வாக்குறுதியை அளித்துள்ள அவர்,எந்த நோய் வந்தாலும் இலவசமாக அரசே சிகிச்சை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதுடன், புதிதாக 20 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்  எனவும் பிரியங்கா காந்தி ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments