மற்றொரு ஓடுபாதையில் விமானத்தைத் தரையிறக்கிய விவகாரம் ; விமானிகளை பணியிடை நீக்கம் செய்தது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

0 8345
விசாரணை முடியும் வரை விமானிகள் பணியிடை நீக்கம் - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

கர்நாடகத்தின் பெல்காம் விமான நிலையத்தில் அனுமதித்த ஓடுபாதையில் இல்லாமல் மற்றொரு ஓடுபாதையில் விமானத்தைத் தரையிறக்கிய விமானிகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.

ஞாயிறன்று ஐதராபாத்தில் இருந்து பெல்காமுக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை 26ஆவது ஓடுபாதையில் தரையிறக்க வான் போக்குவரத்தக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்தது. விமானிகள் தவறுதலாக எட்டாவது ஓடுபாதையில் விமானத்தைத் தரையிறக்கி விட்டனர்.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாகவும், எனினும் இது குறித்த விசாரணை முடியும் வரை விமானிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments