நாட்டு வெடிகுண்டு வீசி இரண்டு ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் ; சிறையில் உள்ள ரவுடிகள் 2 பேர் உள்பட 7 பேர் கைது

0 3150
ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் ; சிறையில் உள்ள ரவுடிகள் 2 பேர் உள்பட 7 பேர் கைது

புதுச்சேரியில் பட்டப்பகலில் குடியிருப்பு பகுதியில், நாட்டு வெடிகுண்டு வீசி இரண்டு ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாணரப்பேட்டையை சேந்த பாம் ரவி மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவலையில் உள்ளது. பாம் ரவியும் அவரது நண்பன் பரிடா அந்தோணியும் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இருவர் மீதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்தது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பிரகாஷ், சந்துரு, நவின், சதிஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடிகளான வினோத் மற்றும் தீன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஆட்களை வைத்து இருவரையும் கொலையை செய்தது தெரியந்துள்ளது. அவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments