அரசுத் துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0 1650

சமூக நலன், மகளிர் உரிமைத் துறை, கருவூலக் கணக்குத் துறை ஆகியவற்றின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்.

கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், உதகமண்டலம் ஆகிய இடங்களில்  ஒருங்கிணைந்த சேவை மையங்கள், தஞ்சாவூரில் பணிபுரியும் மகளிர் விடுதி, பல்நோக்குக் கூடம், சென்னையில் கூர்நோக்கு இல்லம் உள்ளிட்ட கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

கருவூலக் கணக்குத் துறை சார்பில் திருநெல்வேலி, காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய நகரங்களில் கட்டப்பட்டுள்ள மாவட்டக் கருவூல அலுவலகக் கட்டடங்களையும், மண்ணச்சநல்லூர், பூவிருந்தவல்லி, மயிலாடுதுறை, திண்டிவனம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments