சென்னையில் இளம்பெண்னை தற்கொலைக்கு தூண்டியதாக தலைமைக் காவலர் முகிலன் கைது!

0 2460

சென்னை பட்டினப்பாக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தலைமை காவலர் முகிலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 27 வயதான விக்னேஷ்வரி, கணவரை பிரிந்து தனது 2 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், நீலாங்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலரான முகிலன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இருவரும் தனியாக வீடு எடுத்து ஓராண்டாக தங்கி வந்த நிலையில், திடீரென விக்னேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இருவருக்கும் இடையேயான தகராறில் விக்னேஷ்வரியை முகிலன் அடித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடுவதாக உறவினர்கள் புகார் அளித்த நிலையில், பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையின்படி,  கொலைக்கான எந்த தடயமும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையின்படி,  கொலைக்கான எந்த தடயமும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், விக்னேஷ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக நீலாங்கரை காவல் நிலைய தலைமை காவலர் முகிலனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments